10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழுக்கு பதில் தாய்மொழியில் தேர்வு எழுதமாணவர்களுக்கு அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு | 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில்மொழிப்பாடப்பிரிவில் தமிழுக்குப் பதிலாக தங்களது தாய் மொழியில் தேர்வு எழுதவிண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றுபள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கட்டாய தமிழ்தமிழக அரசு, கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை கடந்த 2006-ம் ஆண்டு கொண்டு வந்தது. இதன்படி, '2006-ம் ஆண்டு முதல் மொழிவாரியான சிறுபான்மை பள்ளிக் கூடங்கள்உட்பட அனைத்து வகையான பள்ளிக்கூடங்களிலும் முதல் மொழிப் பாடமாக தமிழைகண்டிப்பாக கற்பிக்க வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது. இந்த சட்டத்தின்படி, கடந்த2006-ம் ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம், 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதினார்கள். அப்போது, சில மாணவர்கள் தங்களுக்கு தமிழ்பாடம் நடத்தப்படவில்லை என்றும் இதனால் பொதுத் தேர்வில் தமிழுக்கு பதில் முதல்மொழிப்பாடமாக தங்களது தாய்மொழியான, தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது ஆகியமொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்குதொடர்ந்தார்கள். தாய்மொழியில் தேர்வு இந்த வழக்குகளை விசாரித்த தலைமைநீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர், 'மொழி வாரியானசிறுபான்மை பள்ளிக்கூடங்களில் படிக்கும் இந்த மாணவர்கள், தங்களதுதாய்மொழியான தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது ஆகிய மொழிகளை தேர்வு எழுதஅனுமதிக்க வேண்டும்' என்று கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டார்கள். இதன்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், தங்களது தாய் மொழியில் தேர்வு எழுதினார்கள். இந்த ஆண்டும் இதே கோரிக்கையுடன், மொழி வாரியான சிறுபான்மை பள்ளிகள், மாணவர்கள் என்று பலர் வழக்கு தொடர்ந்தனர். மீண்டும் அனுமதி இந்த வழக்குதலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர்முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பிலும், மனுதாரர்கள்தரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டார்கள். அனைத்து தரப்பு வாதங்களையும்கேட்டறிந்த நீதிபதிகள், '10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடப்பிரிவில்தமிழுக்குப் பதிலாக தங்களது தாய் மொழியில் தேர்வு எழுத விண்ணப்பித்த அனைத்துமாணவர்களுக்கும் அனுமதி வழங்கவேண்டும்' என்று தமிழக பள்ளிக்கல்வித்துறைக்குஉத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment