தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் ச.மோசஸ்,பொதுச்செயலாளர் செ.பாலசந்தர்,மாநிலப் பொருளாளர் ச.ஜீவானந்தம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
தமிழக அரசின் 2017-2018 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அமல்படுத்தியுள்ள ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு ஊழியர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் நடைமுறைப்படுத்த மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் தமிழக அமைச்சரவை பதவியோற்றுக்கொண்ட சில தினங்களிலேயே மாநில அரசின் எட்டாவது ஊதியமாற்றக்குழுவை அமைத்ததும்,அதன் அறிக்கையை 2017 ஜூன் 30க்குள் அளிக்க உத்தரவிட்டதும் தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கிடையே மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது.
அந்த நம்பிக்கையை முற்றிலும் பொய்யாக்கும் வகையில் 2017-2018 தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ஊதியக்குழுவின் பரிந்துரைக்ளை அமல்படுத்துவதற்குரிய நிதி ஒதுக்கீடு செய்யாதது ஊதிய மாற்றத்தைக் கானல் நீராக்கியுள்ளது.
தமிழகத்தில் ஊதிய மாற்றக்குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் கடந்தகால நடைமுறைகளின்படி தமிழக அரசு ஊழியர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் வரை இடைக்கால நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்குவதற்கும் 2017-2018 தமிழக நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது தமிழக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே ஊதியக்குழு தொடர்பாக மிகுந்த அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கடந்த 2016 பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்திய போராட்டத்தின் விளைவாக அன்றைய தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வல்லுநர் குழு ஒன்றை அமைத்தார். அக்குழுவின் பதவிக்காலம் மூன்றுமுறை நீட்டிக்கப்பட்டதும்,அக்குழுவின் தலைவர் பதவி விலகியதும்,அக்குழுவின் அறிக்கை தமிழகஅரசுக்கு இதுவரை அளிக்கப்படாததும் தமிழக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய எவ்வித அறிவிப்பும் இந்நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படாதது மறைந்த தமிழக முதல்வர் அவர்களின் விருப்பத்திற்கு முரணாக உள்ளது.மறைந்த தமிழக முதல்வரின் வழியில் செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் தமிழக அரசு மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள கோரிக்கைகளின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைக்காக காத்திருக்கின்ற நிலையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை அறுபதாக நீட்டிக்க உள்ளதாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளது.இது தமிழக இளைஞர்களின் ஒட்டுமொத்த வேவலைவாய்ப்பையும் பறிப்பதாக உள்ளது.காலியாக உள்ள பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்பி அரசு நடைமுறைப்படுத்திவரும் மக்கள் நலப்பணிகள் தடையின்றி நடைபெறவேண்டும் என்ற கோரிக்கை வலுவாக உள்ள நிலையில் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் திட்டத்தை அரசு அறிவிக்கக்கூடாது என்றும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
இப்படிக்கு
(செ.பாலசந்தர்)
பொதுச்செயலாளர்

No comments:
Post a Comment