Saturday, April 1, 2017
Wednesday, March 29, 2017
பேறுகால விடுப்பு இனி 26 வாரம் – ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல்
பெண் ஊழியர்களுக்கு, 26 வாரம், பேறு கால விடுப்பு அளிக்கும் புதிய சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
பெண் ஊழியர்களுக்கு, தற்போது, 12 வாரம், பேறுகால விடுப்பு அளிக்கப்படுகிறது. இதை, 26 வாரமாக உயர்த்தும் சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, 50 அல்லது அதற்கு மேல் ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் பெண் ஊழியர்கள், 26 வாரம், பேறுகால விடுப்பு எடுத்துக் கொள்ள முடியும்.
இந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட தொலைவில், பெண் ஊழியர்களுக்காக, குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் இல்லங்களை அமைக்க வேண்டும். பெண் ஊழியர்கள், தங்கள் குழந்தைகளை பார்த்து வர, ஒரு நாளில் நான்கு முறை, குழந்தை பாதுகாப்பு இல்லம் செல்ல, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அனுமதி வழங்க வேண்டும்.
உலகளவில், கனடா, நார்வே நாடுகளுக்கு அடுத்தபடியாக, நம் நாட்டில் தற்போது, அதிக நாட்கள் பேறுகால விடுப்பு வழங்கப்படுகிறது. கனடாவில், 50 வாரங்களும், நார்வேயில், 44 வாரங்களும், பேறு கால விடுப்பு வழங்கப்படுகிறது.
April Diary
*RL-13,16,24,
*14 Tamil new year & good Friday.
*3rd Term Exam
Apirl 24 to 28.)
Apirl 24 to 28.)
Verify with your union aeeo office
Saturday, March 25, 2017
Tuesday, March 21, 2017
Sunday, March 19, 2017
EMIS LATEST NEWS….Please verify Name, DOB while data entry and update, No corrections will be allowed for these fields from next academic year
Educational Management Information System
Data entry, update, transfer/admit is enabled for all classes
Note: Please verify name, DoB while data entry and update, no corrections will be allowed for these fields from next academic year
Saturday, March 18, 2017
Friday, March 17, 2017
Thursday, March 16, 2017
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் ச.மோசஸ்,பொதுச்செயலாளர் செ.பாலசந்தர்,மாநிலப் பொருளாளர் ச.ஜீவானந்தம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் ச.மோசஸ்,பொதுச்செயலாளர் செ.பாலசந்தர்,மாநிலப் பொருளாளர் ச.ஜீவானந்தம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
தமிழக அரசின் 2017-2018 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அமல்படுத்தியுள்ள ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு ஊழியர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் நடைமுறைப்படுத்த மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் தமிழக அமைச்சரவை பதவியோற்றுக்கொண்ட சில தினங்களிலேயே மாநில அரசின் எட்டாவது ஊதியமாற்றக்குழுவை அமைத்ததும்,அதன் அறிக்கையை 2017 ஜூன் 30க்குள் அளிக்க உத்தரவிட்டதும் தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கிடையே மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது.
அந்த நம்பிக்கையை முற்றிலும் பொய்யாக்கும் வகையில் 2017-2018 தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ஊதியக்குழுவின் பரிந்துரைக்ளை அமல்படுத்துவதற்குரிய நிதி ஒதுக்கீடு செய்யாதது ஊதிய மாற்றத்தைக் கானல் நீராக்கியுள்ளது.
தமிழகத்தில் ஊதிய மாற்றக்குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் கடந்தகால நடைமுறைகளின்படி தமிழக அரசு ஊழியர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் வரை இடைக்கால நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்குவதற்கும் 2017-2018 தமிழக நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது தமிழக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே ஊதியக்குழு தொடர்பாக மிகுந்த அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கடந்த 2016 பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்திய போராட்டத்தின் விளைவாக அன்றைய தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வல்லுநர் குழு ஒன்றை அமைத்தார். அக்குழுவின் பதவிக்காலம் மூன்றுமுறை நீட்டிக்கப்பட்டதும்,அக்குழுவின் தலைவர் பதவி விலகியதும்,அக்குழுவின் அறிக்கை தமிழகஅரசுக்கு இதுவரை அளிக்கப்படாததும் தமிழக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய எவ்வித அறிவிப்பும் இந்நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படாதது மறைந்த தமிழக முதல்வர் அவர்களின் விருப்பத்திற்கு முரணாக உள்ளது.மறைந்த தமிழக முதல்வரின் வழியில் செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் தமிழக அரசு மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள கோரிக்கைகளின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைக்காக காத்திருக்கின்ற நிலையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை அறுபதாக நீட்டிக்க உள்ளதாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளது.இது தமிழக இளைஞர்களின் ஒட்டுமொத்த வேவலைவாய்ப்பையும் பறிப்பதாக உள்ளது.காலியாக உள்ள பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்பி அரசு நடைமுறைப்படுத்திவரும் மக்கள் நலப்பணிகள் தடையின்றி நடைபெறவேண்டும் என்ற கோரிக்கை வலுவாக உள்ள நிலையில் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் திட்டத்தை அரசு அறிவிக்கக்கூடாது என்றும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
இப்படிக்கு
(செ.பாலசந்தர்)
பொதுச்செயலாளர்
அந்த நம்பிக்கையை முற்றிலும் பொய்யாக்கும் வகையில் 2017-2018 தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ஊதியக்குழுவின் பரிந்துரைக்ளை அமல்படுத்துவதற்குரிய நிதி ஒதுக்கீடு செய்யாதது ஊதிய மாற்றத்தைக் கானல் நீராக்கியுள்ளது.
தமிழகத்தில் ஊதிய மாற்றக்குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் கடந்தகால நடைமுறைகளின்படி தமிழக அரசு ஊழியர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் வரை இடைக்கால நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்குவதற்கும் 2017-2018 தமிழக நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது தமிழக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே ஊதியக்குழு தொடர்பாக மிகுந்த அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கடந்த 2016 பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்திய போராட்டத்தின் விளைவாக அன்றைய தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வல்லுநர் குழு ஒன்றை அமைத்தார். அக்குழுவின் பதவிக்காலம் மூன்றுமுறை நீட்டிக்கப்பட்டதும்,அக்குழுவின் தலைவர் பதவி விலகியதும்,அக்குழுவின் அறிக்கை தமிழகஅரசுக்கு இதுவரை அளிக்கப்படாததும் தமிழக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய எவ்வித அறிவிப்பும் இந்நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படாதது மறைந்த தமிழக முதல்வர் அவர்களின் விருப்பத்திற்கு முரணாக உள்ளது.மறைந்த தமிழக முதல்வரின் வழியில் செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் தமிழக அரசு மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள கோரிக்கைகளின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைக்காக காத்திருக்கின்ற நிலையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை அறுபதாக நீட்டிக்க உள்ளதாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளது.இது தமிழக இளைஞர்களின் ஒட்டுமொத்த வேவலைவாய்ப்பையும் பறிப்பதாக உள்ளது.காலியாக உள்ள பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்பி அரசு நடைமுறைப்படுத்திவரும் மக்கள் நலப்பணிகள் தடையின்றி நடைபெறவேண்டும் என்ற கோரிக்கை வலுவாக உள்ள நிலையில் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் திட்டத்தை அரசு அறிவிக்கக்கூடாது என்றும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
இப்படிக்கு
(செ.பாலசந்தர்)
பொதுச்செயலாளர்
IMPORTANT G.O.DETAILS…
- பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.PHIL அல்லது PH.Dக்கான இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 18.01.2013 முதல் வழங்கலாம் என பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.
1.G.O.NO. 270 DT : OCTOBER 22, 2012
பள்ளிகளில் பயிலும் மாணவ /மாணவிகளின் பாதுகாப்பு -பள்ளி வளாகம் ,சுற்றுபுறம் ,மற்றும் வாகனங்கள் பராமரித்தல் -பின்பற்றவேண்டிய நடைமுறைகள்2.G.O.NO. 229 DT : செப்டம்பர் 4, 2012
அரசு பள்ளிகளில் பணி நிரவல் காரணமாக தோற்றுவிக்கப்பட்ட புதிய பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து ஆணை மற்றும் பள்ளிகளின் பட்டியல்3.G.O.NO. 123 DT : MAY 17, 2012
தொடக்ககல்வி துறையில் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணை4.G.O.NO. 178 DT : JULY 12, 2012
தொடக்ககல்வி துறையில் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணை5.G.O.NO. 270 DT : JULY 10, 2012
பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்தல்6.G.O.NO. 264DT : JULY 6, 2012
CCE திட்டம் சிறப்பாக நடைபெற பள்ளி நடைமுறையில் சில மாற்றங்களை ஏற்ப்படுத்தி பிறபிக்கப்பட்ட அரசாணை7.G.O.NO. 243 DT : JUNE 29, 2012
புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் அரசாணை -நோய்கள் மற்றும் மருத்துவமனைகள் பட்டியல்8.G.O.NO. 96 DT : JUNE 18, 2012
திருமணமான பெண்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குதல்9.G.O.NO. 140 DT : JUNE 11, 2012
2012 – 2013 ஆம் ஆண்டில் முப்பருவதேர்வு முறை நடைமுறைபடுத்துதல் தொடர்பான அரசாணைக்கு திருத்தம்- அரசாணை எண் 140 தேதி :11-06-201210.G.O.NO. 133 DT : JUNE 14, 2012
பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதியான ஒத்த உயர்கல்வி படிப்புகள் அரசாணை எண் 133 தேதி :04-06-201211.G.O.NO. 203 DT : JUNE 8, 2012
INTEREST – RATE OF INTEREST ON LOANS AND ADVANCES SANCTIONED BY THE STATE GOVERNMENT – INTEREST RATES FOR THE YEAR 2012-2013 2012 – 2013 ஆம் ஆண்டிற்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தமிழக அரசால் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம்12.G.O.NO. 123 DT : MAY 17, 2012
ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தல்13.G.O.(MS).NO.139 DATED: 27.4.2012.
NEW HEALTH INSURANCE SCHEME -REVISED MONTHLY SUBSCRIPTION RS 75-EFFECT FROM 11.06.2012 -GO NO13914.G.O.(MS).NO.56 DATED: 24.4.2012.
B.ED SPECIAL EDUCATON IS EQUIVALENT TO B.ED GENERAL EDUCATION15.LR NO 35574 DATED: 23.4.2012.
CPS-MODE OF RECOVERY OF SUBSCRIPTION AND ARREAR AMOUNT-CLARIFICATION16.G.O MS. NO. 20309/12/2011
முப்பருவ தேர்வுமுறை முதல் அமல் –17. G.O MS. NO. 21223/12/2011
அரசு/ நகராட்சி உயர் /மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலைஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பளிப்பு ஆணை :18.G.O MS. NO. 193 02/12/2011
2011 -2012 ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ள 2863 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் விவரம் மாவட்ட வாரியாக19.G.O MS. NO. 190 29-11-2011
பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்ச்சி மதிப்பெண் -செயமுறைதேர்வு உழைப்பூதியம்.20. G.O MS. NO. 325 28-11-2011
அரசு ஊழியர்களின் திருமணமாகாத மகள்களுக்கு வாழ்நாள் ஓய்வூதியம்-21.GO MS NO-325 DATED THE 28/11/2011LR NO. 59617 /CMPC 2011 DT 25-11-2011
HIGHER SECONDARY SCHOOL HM/DEO – FIXTATION OF PAY OF IN THE SELECTION GRADE -CLARIFICATION22.G.O MS. NO. 177 11-11-2011
பகுதி நேர ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கும் செயல்முறை மற்றும் அவர்களது பணி தொடர்பான விவரங்கள் -GO MS NO-177 DATED THE 11/11/201123.G.O MS. NO. 175 08-11-2011
முதுகலை ஆசிரியர் நியமனம் -எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமே நடைபெறும்-அரசாணை -GO MS NO-175 DATED THE 8/11/201124.G.O MS. NO. 29421-10-2011
பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி உயர்வு-GO MS NO-294 DATED THE 21TH OCTOBER 201125.G.O MS. NO. 994 20-10-2011
அரசு பொது விடுமுறை நாட்கள் -2012-GO MS NO-994 DATED THE 20TH OCTOBER 201126.G.O MS. NO. 273 03-10-2011
1-7-2011முதல் 7 % அகவிலைப்படி உயர்வு குறித்த ஆணை27.G.O MS. NO. 141 13-09-2011
பள்ளிகளில் தேர்வுமுறை மாற்றம் -தொடர் மதிப்பீட்டு முறை அடுத்த ஆண்டு முதல் அமல் – தொடர்பான அரசாணை எண் :143 நாள் :19/09/201128.G.O MS. NO. 141 13-09-2011
10,11,12ம் வகுப்பு மாணவர்கள் இடைநிற்றலை நீக்கும் சிறப்பு ஊக்கதொகை திட்டம்-அரசாணை-தலைமை ஆசிரியருக்கான வழிகாட்டி நெறிமுறைகள்.29.G.O MS. NO. 112 28-07-2011
சாஸ்த்ரா பி.எட் -அங்கீகரித்து ஆணை30.G.O MS. NO. 51 16-06-2011
மகப்பேறு விடுப்பு – 180 நாட்கள் AMENDMENT31.G.O MS. NO. 51 16-05-2011
மகப்பேறு விடுப்பு – 180 நாட்கள்32.G.O MS. NO. 58 FEBRUARY 25, 2011
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து ஆணை33.GO NO23 DATED:12 –01—2011
REVISED FIXATION OF PAY FOR TEACHERS –2010வருட அரசாணைகள்34.LETTER NO.63305 DATED: 08 –11—2010.
FIXATION OF PAY OF EMPLOYEES IN THE SELECTION GRADE / SPECIAL GRADE –35.G.O NO 391 DT 7/10/2010
மாற்று திறனாளிகளின் ஊர்தி படி ரூ 300 லிருந்து ரூ 1000 ஆக உயர்த்தி அரசு ஆணை36.G.O NO 240 DT 18/8/2010
மேல்நிலைப் பள்ளி தொழில் கல்வி ஆசிரியர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான கல்வி தகுதிகள்37.GO.MS.NO-270 DATED-26-08-2010
IMPLEMENTATION OF ONE MAN COMMISION38.GOMS.NO 116 DT 18/08/2010OPENUNIVERSITY-PG DEGREE NOT VALID FOR GOVT.SERVICE39.GO.NO175DT18/06/2010WITHDRAWAL OF ACQUITTANCE FOR SALARIES CREDITED IN BANK THROUGH-ORDER ISSUED ECS40.GO MS NO 157 DT.10-06-2010
30 UPGRADED HR.SEC.SCHOOL LIST41.GO NO 128 DT 05/07/201010 DAY ALM TRAINING-REG42.GO.MS.NO-154 DATED-10/06/2010
UPGRADED HR.SEC.SCHOOL LIST 201043.GO.MS.NO-143 DATED-21/05/2010
UPGRADED HR.SEC.SCHOOL LIST 201044.GO.NO-131 DATED-28/04/2010
ஆசிரியர் பொது மாறுதல்-நெறிமுறைகள்-2010 -1145.GO NO 96 DT 22-03-2010TEMPORARY POST CONTINUATION ORDER -2007-2009 UPGRADED SCHOOLS-ORDER ISSUED UP TO 30/06/20112009வருட அரசாணைகள்46.GO NO.445 DATED: 10–09—2009.
HOUSE BUILDING ADVANCE – RATE OF INTERESTLR NO.29593 DATED: 25–08—2009.இறந்த அரசு ஊழியருக்கு CPS தொகை வழங்குவது தொடர்பான விளக்கம்.47.LETTER NO.38561 DATED: 16 –11—2009.
B.SC BIO-CHEMISTRY IS NOT EQUIVALENT TO B.SC CHEMISTRY2007வருட அரசாணைக48.LR NO 356 DATED: 2-11-2007
முன் அனுமதியின்றி எம்.பில் முடித்தமைக்கு பின் ஏற்பு49.GO NO 31 DATED: 06-02-2007
அரசு தேர்வுகளை நடத்த முதன்மை கண்காணிப்பாளராக வேறு பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமனம்.2006வருட அரசாணைகள்
50.GO NO 120 DATED: 18-07-2006
1-1-2006 முதல் தகுதிகாண் பருவம் துவங்குதல் குறித்து ஆணை51.GO NO 99 DATED: 27-06-2006
1-1-2006 முதல் காலமுறை ஊதியம் வழங்கல்52.GO NO 73 DATED: 23-06-2006
வேலை நிறுத்த காலம்-பணிக்காலமாக வரன்முரைபடுத்தும் ஆணை53.GO NO 73 DATED: 17-11-2006
தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு எழுதவேண்டிய துறைதேர்வுகள் ஆணைDOWNLOADS2006 க்கு முந்தைய அரசாணைகள்54.GO MS NO.11 DATED: 09–02—2004.
உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் -ஒய்வு பெரும் நாள் -பணி நீட்டிப்பு இல்லை55.G.O.NO.1144 DT : DEC 13, 1993
பள்ளிக்கு வருட இடையில் எந்த நிகழ்ச்சிக்காகவும் அரசுவிடுமுறைவிட்டாலும் பள்ளிவேளைனாட்களில் குறைவு ஏற்ப்படகூடாது என்பதர்க்கானா அரசு ஆணை56.GO MS NO.71 DATED: 06–06—2002.
B.SC(BIO-CHEMISTRY) WITH B.ED PHYSICAL SCIENCE ELIGIBLE FOR B.T SCIENCE57.GO MS NO.504 DATED: 02 –11—2000.
SPECIAL PROVIDENT FUND SCHEME -2000 –CLICK HERESPECIAL PROVIDENT FUND SCHEME -2000 RULES
DOWNLOADTAMILNADU EDUCATION RULES58.GO.MS.NO-164 DATED-21/08/2000
M.SC APPLIED CHEMISTRY IS EQUIVALENT TO M.SC CHEMISTRY.
150 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாவும், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக மாற்றப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தமிழக பட்ஜெட்டில் அறிவித்தார்
150 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாவும், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக மாற்றப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தமிழக பட்ஜெட்டில் அறிவித்தார்.
மேலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க ரூ.758 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 2017-18-ம் ஆண்டு பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ரூ.26,932 கோடி தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Wednesday, March 15, 2017
Tuesday, March 14, 2017
வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்!? – பிறந்ததின சிறப்புப் பகிர்வு
‘நீ மிகவும் மோசமாகத் தேர்வு எழுதியிருக்கிறாய்; கணிதம், பெளதிகம் இரண்டைத் தவிர, வேறு எந்தப் பாடத்திலும் தேர்வு பெறவில்லை; மொழிகளில் உனக்குப் போதிய அறிவு இல்லை; இந்தநிலையில், நீ இங்குச் சேர விரும்புகிறாய். அது, உன் அறிவுக்கு மீறிய ஆசையாகும். நீ மறுபடியும் பயிற்சிப் பள்ளிக்குச் சென்று படித்துத் தேர்ச்சிபெற வேண்டும். அப்படித் தேர்ச்சிபெற்று வந்தால், நான் உன்னைச் சேர்த்துக்கொள்கிறேன்” – இது, தொழில்நுணுக்கக் கல்விக்கான நுழைவுத் தேர்வில் தோற்ற ஒருவரைப் பார்த்து… ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத் தலைவர் சொன்னது. பின்னாளில், அந்தத் தேர்வில் தோற்ற மனிதர்தான், அகிலம் வியந்த அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அவருடைய பிறந்த தினம் இன்று.
குழந்தைகளின் மனநிலை!
”வாழ்க்கையில் தவறே செய்யாதவர்கள், புதிதாக எதையும் முயற்சிக்காதவர்களாகத்தான் இருக்க முடியும்” என்ற வாழ்க்கையின் இலக்கணத்தை வளரும் தலைமுறையின் இதயங்களில் நிலைநிறுத்திய ஐன்ஸ்டீன், தாம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஒருகாலத்தில் ஆசிரியர்களால் அவமானப்படுத்தப்பட்டு, விரட்டப்பட்டார். அதனால்தான் அவர், குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு இப்படிச் சொன்னார், ”குழந்தைகளின் மனவியல் தெரியாது கற்பிக்கும் ஆசிரியர்கள், ஏறத்தாழ அவர்களுடைய மனவியல்பைக் கொல்லும் கொலைகாரர்களே.”
”அவன் ஒரு சிந்தனையாளன்!”
சிறுவயதில் பேச்சு வராமல் சிரமப்பட்ட அவர், எப்போதும் எதையாவது சிந்திப்பதிலேயே கவனத்தைக் கொண்டிருந்தார். இப்படித்தான் ஒருமுறை ஐன்ஸ்டீன், எதையோ தனிமையில் உட்கார்ந்து ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். இதைக் கண்ட அவரது மாமா (ரூடி), ”உன் மகன் ஆல்பர்ட்டைப் பார்… எதையோ ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறான். அவன், ஓர் ஆராய்ச்சியாளன்; சிந்தனையாளன்” என்று நக்கலாகச் சொல்லிவிட்டார். அவ்வளவுதான், ஐன்ஸ்டீன் அன்னைக்குக் கோபம் தலைக்கு மீதேறிவிட்டது. எந்தத் தாய், தன் பிள்ளையை விட்டுக்கொடுப்பாள்? காக்கைக்குத் தன் குஞ்சும் பொன் குஞ்சு என்பதுபோல… தன் தம்பியையும் அவர் விட்டுவைக்கவில்லை. ”அவன், ஒரு சிறந்த சிந்தனையாளன்; அறிவாளி… அதனால்தான் அடக்கமாக இருக்கிறான். எதிர்காலத்தில் அவன் ஒரு புகழ்பெற்ற பேராசிரியனாகத் திகழப்போகிறான்” என்றார், முகத்தில் அடித்ததுபோன்று.
ஐன்ஸ்டீன்
ஐன்ஸ்டீன் அன்னை சொன்னது… நூற்றுக்கு நூறு உண்மை. ஆம், பிற்காலத்தில் அவர் எல்லா நாட்டவரும் போற்றும்படியாக வாழ்ந்த மிகச் சிறந்த சிந்தனையாளர்; சாகும்வரை அடக்கத்துடனும், எளிமையுடனும் வாழ்ந்தவர். ஆடைகள் அணிவதிலும், அலங்காரம் செய்வதிலும் அவர் அலட்சியமாகவே இருப்பார்; அழுக்கு ஆடையைப் பல நாள்கள்கூட அணிந்திருப்பார்; வெட்டப்படாத தலைமுடியுடன் வீதிகளிலும், விழாக்களிலும் வலம்வருவார்; சில நேரங்களில் செருப்பில்லாமலும், மேலங்கி அணியாமலும் வெளியே செல்வார். மறுமண மனைவி எல்ஸாவின் பேரிலேயே, அவர் நல்ல ஆடைகளை அணிவார்.
எளிமைக்கு உதாரணம்!
அப்படிப்பட்ட அந்த எளிமையான மாமேதை, ஓரிடத்துக்கு ஒருமுறை சொற்பொழிவாற்றச் சென்றபோது… அவருடன், அவர் மனைவி எல்ஸா செல்ல முடியவில்லை. ஆதலால், தம் கணவருக்கு வேண்டிய நல்ல ஆடைகளை எடுத்து… ஒரு பெட்டியில் வைத்து அதை அவரிடம் கொடுத்தவர், ”இந்தப் பெட்டியில் நல்ல உடைகள் வைத்திருக்கிறேன். சொற்பொழிவுக்குச் செல்லும்போது நீங்கள் மறந்துவிடாமல், அவைகளை எடுத்து அணிந்துகொள்ளுங்கள்” என்றார். தன் மனைவி சொன்னதை அப்படியே கேட்டுக்கொண்ட ஐன்ஸ்டீன், நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டுத் திரும்பிவந்தார். கணவரைக் கண்டு மகிழ்ச்சியடைந்த எல்ஸா, தாம் கொடுத்து அனுப்பிய பெட்டியை வாங்கித் திறந்துபார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். ஆம், அவர் வைத்த ஆடைகள் அப்படியே இருந்தன. கோபமடைந்த எல்ஜா, தம் கணவரிடம்… ”ஏன் இந்த ஆடைகள் அடுக்கிவைத்தபடியே இருக்கின்றன… அவைகளை நீங்கள் அணிந்துகொள்ளவில்லையா” என்றார்.
எல்ஸா கேட்டதைக் கண்டு கொஞ்சமும் கவலையடையாத ஐன்ஸ்டீன், சிரித்துக்கொண்டே அவரிடம்… ”அடடா, எனக்கே மறந்தே போய்விட்டது. நீ கோபித்துக்கொள்ள வேண்டாம்” என்றவர், ”அது இருக்கட்டும். ஆனாலும், எனக்கு ஒரு சந்தேகம்” என்று அவரிடம் ஒரு கேள்வியை வைத்தார். ”எல்லோரும் என் பேச்சைக் கேட்க வருகிறார்களா அல்லது என் ஆடையைப் பார்க்க வருகிறார்களா” என்பதே அது. பாவம் எல்ஸாவால் அதற்குப் பதில் சொல்லவே முடியவில்லை.
ஐன்ஸ்டீன்
”என்னைத் தேடி வருகிறது!”
வாழ்க்கை என்பது இரண்டு நிலைகள்தான். ஏற்றமும் தாழ்வுமே அது. அதில், சரியாகப் பயணிப்பவர்களே… வெற்றிபெறுகிறார்கள். இந்த வெற்றியின் பயணத்தில் ஐன்ஸ்டீனின் வாழ்வும் அடங்கும். இன்பமும், துன்பமும் அவரை எதிர்கொண்டபோது… எந்தச் சூழலிலும் தன் வழியை மாற்றிக்கொள்ளாதவர். அதனால்தான் அவருக்கு மிக உயர்ந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதற்கான தொகை அவருக்குக் கிடைத்தபோது, அதை வெறுக்கவே செய்தார். ”எதை நான் விரும்பவில்லையோ, அது என்னைத் தேடி வருகிறது” என்று முணுமுணுத்தார். அத்துடன், தன் மனைவி எல்ஸாவிடம்… ”இந்தப் பணம் நமக்குத் தேவையில்லை. பாதித் தொகையைத் தர்ம காரியங்களுக்கும் மீதித் தொகையை மிலீமாவுக்கும் (ஐன்ஸ்டீனின் முதல் மனைவி) கொடுத்துவிடலாம்” என்றார். அவர், கருத்துக்கு என்றுமே மறுப்புச் சொன்னதில்லை எல்ஸா. அதனால்தான், அவர்களுடைய இல்லற வாழ்க்கையும் தேனாய் இனித்தது.
”மகாத்மாவோடு ஒப்பிட வேண்டாம்!”
கடைசிவரை எளிமையின் உறைவிடமாய் வாழ்ந்து மறைந்த ஐன்ஸ்டீனிடம், அமெரிக்காவில் இந்தியத் தூதராக இருந்த மேத்தா, ”நீங்கள் மகாத்மா காந்தி போன்றவர்” என்றார். அதற்கு ஐன்ஸ்டீன், ”தயவுசெய்து, என்னை அவரோடு ஒப்பிட்டுப் பேச வேண்டாம். அவர், மனிதகுலத்துக்காக நிறைய தொண்டு செய்திருக்கிறார். நான் என்ன செய்திருக்கிறேன்? ஏதோ, சில விஞ்ஞானக் கோட்பாடுகளைக் கண்டுபிடித்திருக்கிறேன். அவ்வளவுதான்” என்றார், அடக்கத்துடன்.
”அமைதி என்பது ஆழமான புரிதலினால் ஏற்படுவது, அதை ஒருபோதும் அடக்குமுறையால் ஏற்படுத்திவிட முடியாது” என்று சொன்ன அந்த மாமேதை, கடைசிவரை அதேவழியில் பயணித்ததுடன்… ”மற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கையே, ஒரு பயனுள்ள வாழ்க்கையாகிறது” என்று வாழ்ந்து, வரலாற்றிலும் இடம்பிடித்துக்கொண்டது.
EMIS செய்தி !!
தயவுசெய்து EMIS படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை சரியாக பூர்த்தி செய்து கொடுக்கவும். .. அந்த தகவல்களை கொண்டு ஆதார் சிறப்பு முகாம் அமைக்க முதன்மை கல்வி அலுவலர் அவர்களிடம் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. … எண்ணிக்கையில் குறிப்பிட்ட மாணவர்களை பொறுத்து முகாம் அமைக்கப்பட இருக்கிறது. …
*படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்கள்*
ஆகிய விவரங்களை படிவத்தில் சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்…
Thursday, March 9, 2017
1,111 ஆசிரியர் நியமனம் : நாளை டி.ஆர்.பி., பட்டியல்
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான, 'டெட்' தேர்ச்சி பெற்றவர்களின் தரவரிசை பட்டியல், நாளை வெளியாகிறது. ஆசிரியர் தகுதிக்கான, டெட் தேர்வு, ஏப்., 29, 30ல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே டெட் முடித்தவர்கள், தங்களுக்கு பணி நியமனம் கிடைக்குமா என, கவலையில் இருந்தனர்.
இந்நிலையில், 1,111 காலியிடங்களுக்கு, ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் தற்போதைய காலியிடங்கள், 286; பின்னடைவு காலி இடங்கள், 623; அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், 202 காலி இடங்கள் என, 1,111 இடங்களுக்கு, ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மூலம், பதிவு மூப்பு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.இந்த தரவரிசை பட்டியலுக்கு, முந்தைய மதிப்பெண் பட்டியல், டி.ஆர்.பி., இணையதளத்தில், நாளை வெளியாகிறது. அதை, http:/www.trb.tn.nic.in/ என்ற, டி.ஆர்.பி., இணையதளத்தில் பார்க்கலாம். இதில் சுயவிபரங்கள் தவறாக இருந்தால், 'ஆன்லைனில்' நாளை காலை, 10:00 மணி முதல், மார்ச் 20 இரவு, 10:00 மணிக்குள் பதிவேற்றம் செய்யலாம் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதில், எழுத்துபூர்வமான விண்ணப்பங்கள் எதுவும் ஏற்கப்படாது; மறுவாய்ப்பு இனி தரப்படாது.
இந்நிலையில், 1,111 காலியிடங்களுக்கு, ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் தற்போதைய காலியிடங்கள், 286; பின்னடைவு காலி இடங்கள், 623; அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், 202 காலி இடங்கள் என, 1,111 இடங்களுக்கு, ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மூலம், பதிவு மூப்பு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.இந்த தரவரிசை பட்டியலுக்கு, முந்தைய மதிப்பெண் பட்டியல், டி.ஆர்.பி., இணையதளத்தில், நாளை வெளியாகிறது. அதை, http:/www.trb.tn.nic.in/ என்ற, டி.ஆர்.பி., இணையதளத்தில் பார்க்கலாம். இதில் சுயவிபரங்கள் தவறாக இருந்தால், 'ஆன்லைனில்' நாளை காலை, 10:00 மணி முதல், மார்ச் 20 இரவு, 10:00 மணிக்குள் பதிவேற்றம் செய்யலாம் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதில், எழுத்துபூர்வமான விண்ணப்பங்கள் எதுவும் ஏற்கப்படாது; மறுவாய்ப்பு இனி தரப்படாது.
EMIS LATEST NEWS NOW...: Class 1 transfer has been enabled. If you have double entry move the duplicate to student pool.
EMIS LATEST NEWS NOW...: Class 1 transfer has been enabled. If you have double entry move the duplicate to student pool.EMIS LATEST NEWS NOW...: Class 1 transfer has been enabled. If you have double entry move the duplicate to student pool.
Tuesday, March 7, 2017
Tuesday, February 28, 2017
CRC NEWS
அகஇ – 2016-17 – குறுவளமையப் பயிற்சி – தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு “உடலியக்க செயல்பாடுகள் CCE உடன் இணைத்தல்” என்ற தலைப்பிலும், உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு “வளரிளம் பருவம் – மன அழுத்த மேலாண்மை மற்றும் நன்னெறி பண்புகள்” என்ற தலைப்பில் 04.03.2017 அன்று நடைபெறவுள்ளது.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழுக்கு பதில் தாய்மொழியில் தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழுக்கு பதில் தாய்மொழியில் தேர்வு எழுதமாணவர்களுக்கு அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு | 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில்மொழிப்பாடப்பிரிவில் தமிழுக்குப் பதிலாக தங்களது தாய் மொழியில் தேர்வு எழுதவிண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றுபள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கட்டாய தமிழ்தமிழக அரசு, கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை கடந்த 2006-ம் ஆண்டு கொண்டு வந்தது. இதன்படி, '2006-ம் ஆண்டு முதல் மொழிவாரியான சிறுபான்மை பள்ளிக் கூடங்கள்உட்பட அனைத்து வகையான பள்ளிக்கூடங்களிலும் முதல் மொழிப் பாடமாக தமிழைகண்டிப்பாக கற்பிக்க வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது. இந்த சட்டத்தின்படி, கடந்த2006-ம் ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம், 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதினார்கள். அப்போது, சில மாணவர்கள் தங்களுக்கு தமிழ்பாடம் நடத்தப்படவில்லை என்றும் இதனால் பொதுத் தேர்வில் தமிழுக்கு பதில் முதல்மொழிப்பாடமாக தங்களது தாய்மொழியான, தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது ஆகியமொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்குதொடர்ந்தார்கள். தாய்மொழியில் தேர்வு இந்த வழக்குகளை விசாரித்த தலைமைநீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர், 'மொழி வாரியானசிறுபான்மை பள்ளிக்கூடங்களில் படிக்கும் இந்த மாணவர்கள், தங்களதுதாய்மொழியான தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது ஆகிய மொழிகளை தேர்வு எழுதஅனுமதிக்க வேண்டும்' என்று கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டார்கள். இதன்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், தங்களது தாய் மொழியில் தேர்வு எழுதினார்கள். இந்த ஆண்டும் இதே கோரிக்கையுடன், மொழி வாரியான சிறுபான்மை பள்ளிகள், மாணவர்கள் என்று பலர் வழக்கு தொடர்ந்தனர். மீண்டும் அனுமதி இந்த வழக்குதலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர்முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பிலும், மனுதாரர்கள்தரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டார்கள். அனைத்து தரப்பு வாதங்களையும்கேட்டறிந்த நீதிபதிகள், '10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடப்பிரிவில்தமிழுக்குப் பதிலாக தங்களது தாய் மொழியில் தேர்வு எழுத விண்ணப்பித்த அனைத்துமாணவர்களுக்கும் அனுமதி வழங்கவேண்டும்' என்று தமிழக பள்ளிக்கல்வித்துறைக்குஉத்தரவிட்டனர்.
Subscribe to:
Posts (Atom)